முழுவீச்சில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகள்
விழுப்புரம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் உள்ள 210 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தலை அமைதியாகவும், நேர்மையான முறையிலும் நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் நகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள இ.எஸ். கலை அறிவியல் கல்லூரி, வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு
இந்த வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையும், வாக்கு எண்ணும் இடங்களில் தடுப்புக்கட்டை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு அந்த அறையை சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் சுற்றிலும் வலை அடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, மருத்துவ குழுவினருடன் மருத்துவ அறைகளும் தயார் செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அதுபோல் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகளின் ஜன்னல்களை மரப்பலகைகள் மூலம் மூடும் பணியும் நடந்து வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இவை முடிந்ததும் ஓரிரு நாளில் வாக்குகள் எண்ணும் இடம் மற்றும் அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்தவும், தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி செய்வதற்கான பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story