தேனியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலைமறியல்


தேனியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 12 Feb 2022 9:51 PM IST (Updated: 12 Feb 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

உப்புக்கோட்டை:
தேனி அல்லிநகரம் நகராட்சி 8-வது வார்டில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இறப்பவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை வசதி இல்லை. மேலும் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் செய்தனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தேனி அல்லிநகரம் எஸ்.என்.ஆர். ஜங்ஷன் பகுதியில் நேற்று சாலைமறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story