பறவைகள் சரணாலயத்தில் மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் ஆய்வு


பறவைகள் சரணாலயத்தில் மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Feb 2022 10:21 PM IST (Updated: 12 Feb 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங் குடிப்பட்டி பறவைகள் சரணாலயத்தில் கொள்ளுக்குடிபட்டி பகுதியை மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங் குடிப்பட்டி பறவைகள் சரணாலயத்தில் கொள்ளுக்குடிபட்டி பகுதியை மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணியை மண்டல பாதுகாப்பு அலுவ லரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக கள இயக்குனருமான தீபக்பில்கி ஆய்வு மேற்கொண்டார். 
ஆய்வின் போது கொள்ளுக்குடிபட்டி கண்மாயின் சுற்றுப் பரப்பளவு நீர் இருப்பு அளவு, பறவைகள் தற்போதைய இருப்பு விவரம் கடந்த ஆண்டு பறவைகளின் வருகைக்கும் இந்த ஆண்டு பறவைகளின் வரத்துக்கும் முன்னேற்றம் குறித்தும் பறவைகள் தங்குவதற்கான சுற்றுச்சூழல் குறித்தும் கேட்டறிந்தார். 
மேலும் புதிய இன பறவைகள் மற்றும் தற்போதைய குஞ்சுயினப் பறவைகள் இருப்பினை தொலை நோக்கி மூலம் கண்டறிந்தார். 
சிறப்பு ஏற்பாடு
தொடர்ந்து இதுபோல் தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடப்பதாகவும் பார்வையாளர்களுக்கு வனத்துறை மூலம் தொலைநோக்கு கருவி, வாட்ச் டவர் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இருப்பதாகவும் இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் பறவைகள் பாதுகாப்பு குறித்து மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.
 இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன், வனச் சரக அலுவலர் மதிவாணன், வனவர் திருப்திராஜன், வனக் காப்பாளர்கள் வீரைய்யா, செல்வம், வனக்காவலர் வாசுகி மற்றும் சரக வனப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story