மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Feb 2022 10:29 PM IST (Updated: 12 Feb 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.

காரைக்குடி, 
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
முன்னேற்பாடு
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் அலுவலர்களும் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்து வருகின்றனர். 
சிவகங்கை மாவட்டம் முழுவதும் தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 
சின்னம்
காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் தலைமையில் இந்த பணி நடைபெற்றது. இதில் காரைக்குடி பகுதியில் போட்டி யிடும் 36 வார்டு வேட்பாளர்களும் கலந்துகொண்டு அவர் களின் முன்னிலையில் கட்சியின் சின்னம் பொருத்தப் பட்டு கருத்து கேட்கப்பட்டது. 
முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை திறந்து அங்கிருந்த எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் சின்னம் பொருத்தும் பணிக்கு எடுத்து செல்லப்பட்டது.

Next Story