பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வேலாங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 50). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான கடலை காட்டில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான ராஜகோபால், அவரது சகோதரர் கதிர்வேல், ராஜகோபாலின் மனைவி வனிதா, உறவினர் தங்கவேல் ஆகிய 4 பேரும் கன்னியம்மாளிடம் சொத்தில் பங்கு கேட்டு அவரை திட்டி தாக்கியுள்ளனர். அப்போது கன்னியம்மாள் சத்தம் போடவே அருகில் இருந்த அவரது கனவர் பாலகிருஷ்ணன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்துள்ளனர். இதைப்பார்த்த ராஜகோபால் உள்பட 4 பேரும் கன்னியம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த தகராறில் காயமடைந்த கன்னியம்மாள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் ராஜகோபால், கதிர்வேல், வனிதா, தங்கவேல் ஆகிய 4 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story