முதியவர், சிகிச்சை பலனின்றி சாவு


முதியவர், சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 12 Feb 2022 10:40 PM IST (Updated: 12 Feb 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் விடுதியில் மயங்கி கிடந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் அறை எடுத்து தங்கினார்.  கடந்த 1-ந்தேதி முதியவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள், ஜன்னல் வழியாக  பார்த்த போது அறைக்குள் முதியவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து  வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில்  போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக  108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  முதியவர் விடுதியில் தங்கும் போது  திருநெல்வேலி  மாவட்டம் திசையன்விளை மேலத்தெரு பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் (வயது60) என்று முகவரி கொடுத்திருந்தார்.  முதியவர் விடுதியில் கொடுத்திருந்த முகவரியில் போலீசார் விசாரித்த போது அந்த முகவரி போலியானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story