22 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 22 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க தேர்வாகியுள்ளனர். அவர்களை கலெக்டர் வினீத் பாராட்டினார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 22 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க தேர்வாகியுள்ளனர். அவர்களை கலெக்டர் வினீத் பாராட்டினார்.
22 மாணவ-மாணவிகள் தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படித்து பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இலவசமாக மாவட்ட கல்வித்துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 95 மாணவர்கள் தேர்வானார்கள்.
சென்னையில் நடந்த மருத்துவ கவுன்சிலிங்கில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 42 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களில் மதிப்பெண் அடிப்படையில் 22 மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி
அதன்படி ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வைஷ்ணவி கோவை மருத்துவக் கல்லூரியிலும், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அபிராமி மதுரை மருத்துவக் கல்லூரியிலும், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி காவ்யா தேனி மருத்துவக் கல்லூரியிலும், பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி காஞ்சனா சிவகங்கை மருத்துவக் கல்லூரியிலும், கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் பிரசாந்த் திருப்பூர் மருத்துவக் கல்லூரியிலும் படிக்க தேர்வானார்கள்.
இதுபோல் ஜெய்வாபாய் மாநகராட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நர்மதா நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியிலும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ரேஷ்னி விருதுநகர் மருத்துவக் கல்லூரியிலும், ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரியா திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியிலும், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் பத்ரி நாராயணன் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியிலும், ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி மோகலதா கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் படிக்க தேர்வானார்கள்.
பல் மருத்துவக்கல்லூரி
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீஜா திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியிலும், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் மதன் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியிலும், அய்யங்காளிபாளையம் வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியிலும், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜெகன் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரியிலும், மூலனூர் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் நவநீதகிருஷ்ணன் கிருஷ்ணகிரி செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா சென்னை தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியிலும், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி லாமினி மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவக் கல்லூரியிலும், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதா நீலகிரி மருத்துவ கல்லூரியிலும், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மோகன் கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரிப்பிரியா திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரியிலும், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரியிலும், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி மதுரை பெஸ்ட் மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிக்க தேர்வானார்கள்.
கலெக்டர் பாராட்டு
கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 18 அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர இடம் பெற்றனர். இந்த ஆண்டு 22 பேர் இட ஒதுக்கீடு பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளனர். இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவ-மாணவிகளை கலெக்டர் வினீத் நேற்று பாராட்டினார். மாணவர்கள் நன்றாகப் படித்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதுபோல் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வங்கி கடன் உதவி வசதி தேவைப்பட்டால் தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி அலெக்சாண்டரிடம் வலியுறுத்தினார்.
இதில் முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், நீட் தேர்வு இலவச பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story