கோழிக்கொண்டை பூ விளைச்சல் அதிகரிப்பு
பல்லடம் பகுதியில் கோழிக்கொண்டை பூ விளைச்சல் அதிகரிப்பு காரணமாக உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்லடம்
பல்லடம் பகுதியில் கோழிக்கொண்டை பூ விளைச்சல் அதிகரிப்பு காரணமாக உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோழிக்கொண்டைப்பூ சாகுபடி
பல்லடம் சுற்று வட்டாரப்பகுதிகளான கள்ளக்கிணறு, ஆலூத்துப்பாளையம், இலவந்தி, சித்தம்பலம், கரசமடை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இதில் ஏக்கருக்கு 500 கிலோ முதல் 600 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம்.
தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.80, ரூ.90 விலை கிடைக்கிறது. மற்ற விவசாயப்பயிர்களை விட கோழிக்கொண்டைப்பூக்கள் சாகுபடி குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் என்பதால் இந்த கோழிக்கொண்டைப்பூ விவசாயத்தை ஆண்டு தோறும் ஆர்வமுடன் விவசாயிகள் செய்து வருகின்றனர். அறுவடைக்கு வந்த 4 மாதமும் பலன் தந்து தினசரி வருவாயை ஈட்டித்தரும்.
விற்பனை பாதிப்பு
கோழிக்கொண்டைப்பூக்கள் சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் செடிகளில் பூக்கும். ரோஜா, சம்பங்கி, செண்டுமல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சேர்க்க கோழிக்கொண்டை பூக்கள் பயன்படுகிறது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப்பூக்கள் திருப்பூர் மற்றும் கோவை பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இது குறித்து கோழிக்கொண்டை பூ பயிரிட்ட விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கோழிக்கொண்டை பூ விற்பனை பாதிக்கப்பட்டது. விற்பனை இல்லாததால் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்திருந்த விவசாயிகள் அவற்றை அழிக்கவேண்டிய நிலை வந்தது. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மீண்டும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி பரப்பளவை விவசாயிகள் குறைத்துக்கொண்டனர். பலர் மாற்று பயிர் சாகுபடிக்கு மாறினர். இதனால், தற்போது கோழிக்கொண்டை பூ உற்பத்தி குறைந்ததால் தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ சராசரியாக, தற்போது சராசரியாக 90 ரூபாய்க்கு விலை போகிறது.இது கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story