5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 12 Feb 2022 11:22 PM IST (Updated: 12 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும், தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 21 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 29 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதற்கிடையே நேற்று 22-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 490 மையங்களில் நடைபெற்றது. இந்த முகாம் பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story