வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்பு


வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 11:42 PM IST (Updated: 12 Feb 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு தின விழாவில் அணிவகுத்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜோலார்பேட்டை

குடியரசு தினவிழாவில் அணிவகுத்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு தின விழா

சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட ராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் பெருமைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அவரது அலங்கார ஊர்தி சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் இடம்பெற செய்யப்பட்டது.

அதன்பின்னர் அந்த ஊர்தி தமிழகம் முழுவதற்கும் சென்று காட்சிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து நேற்று பிற்பகல் புறப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி திருப்பத்தூர் மாவட்ட எல்லையான நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதிக்கு வந்தடைந்தது.

அந்த ஊர்தியை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மலர் தூவி பாரம்பரிய மகளிர் நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர், வருவாய் துறையினர் ஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

கலை நிகழ்ச்சிகள்

நாட்டறம்பள்ளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணி வரை பொது மக்கள் பார்வைக்கு அலங்கார ஊர்தி நிறுத்தப்படுகிறது. அப்போது பல்வேறு துறையினர் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

அதன் பிறகு நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து புறப்பட்டு வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளுக்கு அலங்கார ஊர்தி செல்கிறது. தொடர்ந்து மாவட்ட இறுதி எல்லையான அகரம்சேரி வழியாக வேலூர் மாவட்டத்துக்கு செல்கிறது.

வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் சரவணன், ஜோலார்பேட்டை தொகுதி  க.தேவராஜி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, வெலக்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராமன், வர்த்தக அணி துணை செயலாளர் என்.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story