சாத்தனூர் அணை குடிநீர் குழாய் 7 இடங்களில் சேதம்


சாத்தனூர் அணை குடிநீர் குழாய் 7 இடங்களில் சேதம்
x
தினத்தந்தி 12 Feb 2022 11:42 PM IST (Updated: 12 Feb 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலைக்கு சப்ளை செய்யப்படும் சாத்தனூர் அணை குடிநீர் குழாய் 7 இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த கொலமஞ்சனூர் பிக்கப் அணைக்கட்டில் இருந்து திருவண்ணாமலை நகராட்சிக்கு பெரிய ராட்சத குழாய் மூலம் குடிநீர் தினசரி சென்று கொண்டிருக்கிறது. 

எதிர்மேடு பகுதியில் இருந்து தண்டராம்பட்டு ஊராட்சி எல்லைக்குள் உள்ள இடைப்பட்ட பகுதியில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது.

இந்த தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் செல்வதால் தற்போது விளை நிலங்களில் நெல் மணிலா பயிரிடப்பட்டுள்ளதால் பயிர்கள் மீது தண்ணீர் சென்று பயிர்கள் அதிக அளவில் பாதிக்கிறது. 

இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி ஊழியர்கள் விரைந்து குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story