அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட கலெக்டர்
திருப்பத்தூரில் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திய கலெக்டர் அவர்களுடன் ஒனட்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திய கலெக்டர் அவர்களுடன் ஒனட்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கின்ற 11-ம் வகுப்பை சேர்ந்த 16 மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு அக்னிச் சிறகுகள் புத்தகங்களை பரிசாக கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் உணவு அருந்தினார். மாணவ, மாணவிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசுகையில், ‘‘நமது மாவட்டத்தில் 15 சுற்றுலாத்தலங்கள் கண்டறியப்பட்டு 2 வருடத்துக்குள் மேம்படுத்தப்படும். குழந்தை திருமணங்கள் நடப்பது குறித்த புகார்களை 1098 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். ஏலகிரிமலையில் சிறுவர் பூங்கா, தாவரவியல் பூங்கா, மலர்கள் பூங்கா, நாற்றங்கால் மற்றும் பாரா கிளைடின் பயிற்சி மையம் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் நூலகத்துக்கு குறைந்தபட்சம் வாரத்துக்கு இரு முறையாவது சென்று படிக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story