12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை


12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 13 Feb 2022 12:30 AM IST (Updated: 13 Feb 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி, பிப்.13-
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 42). தொழிலாளியான இவர் 12 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில்,  வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை செய்ய முயற்சி
*ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (45). அதே பகுதியில் கோகுலம் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). இருவரும் தேங்காய் மண்டியில் தினக்கூலி வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு கூலி பிரிப்பதில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஸ்குமாரை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அவரை கோவிந்தராஜ் கத்தியால் கழுத்து மற்றும் தலையில் வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் ஸ்ரீரங்கம் போலீசார் கோவிந்தராஜ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
*மண்ணச்சநல்லூர் தாலுகா கோலத்தகுடியை அர்ஜுன தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சவுமியா (வயது 23). இவரும் மணிகண்டம் தாலுகா நாகமங்கலம் நாராயண புரத்தை சேர்ந்த பாலன் மகன் கார்த்திக் (26) ஆகியோர் காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கார்த்திக்கின் தந்தை பாலன், தாயார் தங்கமணி, சகோதரர் தங்கராசு ஆகியோர் இந்த  திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுத்தனர். மேலும் சவுமியாவை அவரது குடும்ப உறுப்பினர்கள்,  உறவினர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக்கிற்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சவுமியா திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கணவர் கார்திக் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story