தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் குழாயில் உடைப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி அண்ணாநகர் தெருவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மண்ணச்சநல்லூர், திருச்சி.
குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகள்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், ஸ்ரீரங்கம் வட்டம் அல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் குப்பைகள் மற்றும் கோழி, மீன் இறைச்சி கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அல்லித்துறை, திருச்சி.
Related Tags :
Next Story