கொடைக்கானல் அருகே மரங்களை வெட்டி கடத்த முயன்றவர் கைது


கொடைக்கானல் அருகே மரங்களை வெட்டி கடத்த முயன்றவர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2022 1:14 AM IST (Updated: 13 Feb 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே மரங்களை வெட்டி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் வனச்சரகர் சிவகுமார் ஆலோசனையின்பேரில் வனவர் கார்த்திக் தலைமையிலான வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர், அப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மர்மநபர் ஒருவர் 3 ராட்சத மரங்களை வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அவர் பெருமாள்மலையை சேர்ந்த கங்காதரன் (வயது 44) என்பதும், வீட்டு தேவைக்காக மரங்களை வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து கங்காதரன் கைது செய்யப்பட்டார்.
மேலும் கொடைக்கானலை சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழையும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story