கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் ஐகோர்ட்டில் மனு


கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 13 Feb 2022 1:19 AM IST (Updated: 13 Feb 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொல்லை விவகாரத்தில் கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

மதுரை,

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் கல்லூரி தாளாளரை போலீசார் கைது செய்யாமல் இருந்ததை கண்டித்து மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் ஜோதிமுருகன், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கோர்ட்டில் சரணடைந்ததால் அவரை போலீசார் பழனி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், தாளாளர் ஜோதிமுருகனுக்கு கீழ் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முரளி சங்கர், இந்த வழக்கு குறித்து ஜோதிமுருகன் தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Related Tags :
Next Story