கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு பெண் தற்ெகாலை


கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு பெண் தற்ெகாலை
x
தினத்தந்தி 13 Feb 2022 1:40 AM IST (Updated: 13 Feb 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு, தீப்பற்ற வைத்து பெண் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகாசி, 
கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு, தீப்பற்ற வைத்து பெண் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
கியாஸ் சிலிண்டர் 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடப்பட்டி மேலூரை சேர்ந்தவர் ஜெய கணேசன். இவருடைய மனைவி செல்வராணி (வயது 38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஜெயகணேசன் நுரையீரல் பாதிப்பு காரணமாக இறந்துவிட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு செல்வராணி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த செல்வராணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
பெண் சாவு 
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து செல்வராணியின் சகோதரி சுந்தரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story