ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரோஜா பூக்கள் வருகை அதிகரிப்பு


ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரோஜா பூக்கள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2022 2:09 AM IST (Updated: 13 Feb 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரோஜா பூக்கள் வருகை அதிகரித்து உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரோஜா பூக்கள் வருகை அதிகரித்து உள்ளது. 
காதலர் தினம் 
காதலர் தினம் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தங்களது காதலர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுப்பது வழக்கம். அதிலும் காதலர்கள் தங்களது காதலிகளுக்கு ரோஜா பூக்களை விரும்பி வாங்கி கொடுப்பார்கள். தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் தங்களது காதலை வெளிப்படுத்த பல்வேறு வழிகள் இருந்தாலும், ரோஜா பூவை கொடுத்து அன்பை பகிர்ந்து கொள்வதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். 
எனவே காதலர் தினத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோஜாபூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. 
பெரிய ரோஜா 
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் வித, விதமான சிறிய மற்றும் பெரிய ரோஜாக்களை வாங்கி விற்பனை செய்வது வழக்கம். 
 அந்த வகையில் நாளை காதலர் தினத்தையொட்டி இந்த ஆண்டும் புதிய வண்ண, வண்ண கலரில் பல்வேறு வகையான பூக்கள் வந்துள்ளன. இந்த பூக்கள் ஓசூர், பெங்களூரு, பாகலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக வியாபாரிகள் ஊட்டி ரோஸ், கிளாடி மற்றும் ஜெர்ரிபுரா பின்க் ரோஸ், டார்க் பிங்க் ரோஸ், ஒயிட் ரோஸ், எல்லோ ரோஸ் என 10-க்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்கள் வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இத்தகைய வண்ண, வண்ண கலரில் உள்ள ரோஜா பூக்கள் காண்போர் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோஜா பூக்களின் வருைக அதிகரித்து உள்ளதால் காதலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story