தேன் கூடுகளை சேதப்படுத்திய கரடிகள்
கடையம் அருகே கரடிகள் தோட்டத்தில் புகுந்து தேன் கூடுகளை சேதப்படுத்தின.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி பகுதியில் விவசாயிகள் பலர் தோட்டங்களில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள தோட்டங்களில் கரடிகள் புகுந்து, தேன் கூடுகளை சேதப்படுத்தி உள்ளன. அவ்வாறு ரமேஷ் என்பவரது தோட்டத்தில் 6 தேன் கூடுகளையும், டொமினிக் தோட்டத்தில் 12 தேன் கூடுகளையும், கண்ணன் தோட்டத்தில் 2 தேன் கூடுகளையும் சேதப்படுத்தி இருக்கின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்த நிலையில் தோட்டங்களில் புகுந்து பயிர்கள் மற்றும் தேன் கூடுகளை கரடிகள் சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story