பேராவூரணியில் போலீஸ் கொடி அணிவகுப்பு
பேராவூரணியில் போலீஸ் கொடி அணிவகுப்பு
பேராவூரணி;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் வேட்புமனுத்தாக்கல் பரிசீலனை முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி, அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக பேராவூரணியில் கூடுதல் போலீஸ் சூப்பரண்டு கென்னடி தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செங்கமலக்கண்ணன், மோகன்தாஸ், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் செல்வி, ஜெயா, மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக் சென்று ஆவணம் சாலையில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story