கும்பகோணத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் வந்தது
கும்பகோணத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் வந்தது.
ஈரோடு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து அரிசி, நெல் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கும்பகோணத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயில் பெட்டிகளில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள். பிறகு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான குடோன்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story