கொங்கணாபுரம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்


கொங்கணாபுரம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
x
தினத்தந்தி 13 Feb 2022 3:30 AM IST (Updated: 13 Feb 2022 3:30 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.

எடப்பாடி:
கொங்கணாபுரம் அடுத்த காவடிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவருடைய மனைவி ஜீவிதா (வயது 30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹாசினி (9) மகளும், சர்வின் (6) என்ற மகனும் உள்ளனர். தினேஷ்குமார் ரிக் வண்டியில் வேலை செய்வதால் மத்திய பிரதேசத்திற்கு சென்று உள்ளார். 
இந்நிலையில் ஜீவிதா நேற்று பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருப்பதாக கூறி மதியம் வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்பு வெகு நேரமாகியும் ஜீவிதா மற்றும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மத்திய பிரதேசத்தில் இருக்கும் தினேஷ்குமாருக்கு தகவல் கொடுத்து அக்கம்பக்கத்தில் தேடி வந்துள்ளனர். மேலும் இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீவிதா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டிக்கொண்டு ஸ்கூட்டரில் கொங்கணாபுரம் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் ஸ்கூட்டர் சாவியை அருகில் இருந்த பேக்கரியில் கொடுத்துவிட்டு தனது குடும்பத்தினர் வந்து வாங்கி கொள்வார்கள் என கூறி சென்றுள்ளார். இதுகுறித்து பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 2 குழந்தைகளுடன் ஜீவிதா எடப்பாடியில் இருந்து சேலத்திற்கு செல்லும் பஸ்சில் ஏறியது பதிவாகி உள்ளது. மேலும் சேலம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது எடப்பாடி பஸ்சில் இருந்து கீழே இறங்கும் காட்சி பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story