கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.4½ கோடிக்கு வர்த்தகம்
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.4½ கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. இதில் ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மேலும் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று சந்தைக்கு மொத்தம் 5 ஆயிரம் ஆடுகள், 2 ஆயிரம் கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.4 ஆயிரத்து 650 முதல் ரூ.6 ஆயிரம் வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரத்து 200 வரையும், வளர்ப்பு குட்டி ஆடுகள் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. சேவல்கள் தரத்திற்கு ஏற்ப ரூ.1000 முதல் ரூ.4 ஆயிரம் 500 வரையும், கோழிகள் ரூ.100 முதல் ரூ.1000 வரையும் விற்பனையானது. காய்கறிகள் 110 டன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. நேற்று மட்டும் சந்தையில் ரூ.4 கோடியே 50 லட்சத்திற்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story