வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்கு மது உணவு வழங்கக்கூடாது
வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்கு மது உணவு வழங்கக்கூடாது
ாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்கு மது, உணவு வழங்கக்கூடாது என்று வேட்பாளர்களுக்கு அதிகாரி அறிவுரை வழங்கினார்.
நகராட்சி தேர்தல்
உடுமலை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு உடுமலை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் தலைமை தாங்கினார். நகரமைப்பு ஆய்வாளர் பழனிக்குமார், வட்டார கண்காணிப்பாளர் மோகன்பாபு ஆகியோர் கூறியதாவது
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்குள்ளும், வாக்குச்சாவடி பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் வாக்கு சேகரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கக்கூடாது. வாக்கு சேகரிப்பதில் வாக்காளர்களை நிர்ப்பந்தித்தல், அச்சுறுத்தல், மிரட்டுதல், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு செல்லவிடாமல் தடுத்தல் ஆகிய செயல்களை செய்யக்கூடாது. வாக்குச்சாவடிக்கு அருகில் துண்டு பிரசுரங்களை வியோகிக்கக்கூடாது.
வாக்குச்சாவடி பகுதியில் ஒலிபெருக்கி மூலமாக ஓசை எழுப்புதல், கூச்சல், குழப்பம் ஏற்படுத்துதல் போன்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு உணவு, மது ஆகியவற்றை வழங்கக்கூடாது. வாக்குச்சாவடிக்கு செல்வதற்காக வாக்காளர்களுக்கு வாகன வசதி செய்து தரக்கூடாது.
வாக்குச்சாவடிக்குள் வாக்குப்பதிவு பணியாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர், வாக்குச்சாவடி முகவர், வாக்காளர்கள், வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தை, மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வை இழந்த வாக்காளர்களை வழிநடத்தும் ஒரு நபர் ஆகியோர் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்குச்சாவடி முகவர்
வாக்குச்சாவடி முகவர், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு சென்று விட வேண்டும்.
வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களை நேரடியாகவோ, சைகை போன்று மறைமுகமாகவோ எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்க தூண்டக்கூடாது.வாக்குச்சாவடி முகவர் வாக்குச்சாவடி பணிக்கு வரும்போது அவரது நியமன ஆணையுடன் வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கையேடு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story