தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகம் மதுரைக்கு திடீர் மாற்றம்


தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகம் மதுரைக்கு திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 13 Feb 2022 6:16 PM IST (Updated: 13 Feb 2022 6:16 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் இதுவரை இயங்கி வந்த தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தினை திடீரென்று மதுரைக்கு மாற்றி உள்ளதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் இதுவரை இயங்கி வந்த தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தினை திடீரென்று மதுரைக்கு மாற்றி உள்ளதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கோரிக்கை
ராமநாதபுரத்தில் தொழிலாளர்கள் நலனுக்காக தொழிலாளர் நல ஆய்வாளர், தொழிலாளர் நல அலுவலகம், தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகம் ஆகியவை இயங்கி வந்தன. குறிப்பாக தொழிலாளர் நல துணை ஆணையர் அலவலகம் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களுக்கு சேர்த்து ராமநாதபுரத்தில் இயங்கி வந்தது. 
இந்த துணை ஆணையர் அலுவலகத்தின் மூலம் ராமநாத புரம் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள், விண்ணப்பங்கள், நல உதவிகள் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தனர். மேலும், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், விசார ணைகள் இந்த அலுவலகத்தின் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. 
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த துணை ஆணையர் அலுவலகம் திடீரென்று மதுரைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொழிலா ளர்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து அந்த முடிவு கைவிடப்பட்டது. 
திடீர் மாற்றம்
இந்தநிலையில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தினை ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு திடீரென்று மாற்றி உள்ளனர்.
இதற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர் நல அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் உள் ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், ராமநாதபுரத்தில் இத்தனை ஆண்டுகாலம் செயல்பட்டு வந்த தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தினை மதுரைக்கு மாற்றி உள்ளது கண்டனத்திற்கு உரியது.
நடவடிக்கை 
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ராம நாதபுரத்திற்கு வந்து செல்லும் அதிகாரிகளின் நலனுக்காக இவ்வாறு மாற்றி உள்ளது தொழிலாளர் விரோத போக்காகும். எனவே, உடனடியாக தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தினை தொடர்ந்து ராமநாதபுரத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story