தொண்டியில் போலீஸ் கொடி அணிவகுப்பு


தொண்டியில் போலீஸ் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 13 Feb 2022 6:40 PM IST (Updated: 13 Feb 2022 6:40 PM IST)
t-max-icont-min-icon

தொண்டியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தொண்டி, 
தொண்டி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற காவல்துறையினர் உரிய நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பொதுமக்களிடையே தேர்தல் தொடர்பான அச்சத்தை போக்கும் வகையிலும் வாக்காளர்கள் எந்தவித இடை யூறுகளும் இல்லாமல் வாக்களிக்கலாம் என்பதை விளக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தொண்டி பாவோடி மைதானம் முன்பு தொடங்கிய கொடி அணிவகுப்பை திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ஜெய பிரிட்டா, பாலசிங்கம், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுக்கள், ஆயுதப் படை போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட சுமார் 130-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பு கிழக்கு கடற்கரை சாலை, வட்டானம் சாலை, மீனவர் சாலை, கடற்கரை சாலை, கிட்டங்கி தெரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

Next Story