பெண்ணை ஏமாற்றி ரூ.32 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
கமுதியில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை ஏமாற்றி ரூ.32 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
கமுதி,
கமுதியில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை ஏமாற்றி ரூ.32 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். மையம்
கமுதி பஸ் நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் விருதுநகர் மாவட்டம் திருச் சுழியைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி வசந்தா (வயது42) கடந்த 8-ந் தேதி பணம் எடுக்க வந்துள்ளார்.
அப்போது ஏ.டி.எம். மையத்தில் நின்ற வாலிபர் பணம் எடுத்துக் கொடுப்பது போல் வசந்தாவின் ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொண்டு, வேறு ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். இதையடுத்து 10-ந் தேதி வசந்தாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.32 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வசந்தா கமுதி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில், குற்றப்பிரிவு போலீசார் வேதமாணிக்கம், எத்திராஜ், அழகுராஜா, கார்த்திக் உள்ளிட்டோர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரனணயில் ஈடுபட்டனர்.
கைது
இதில் மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்குடுசாமி மகன் சரவணக்குமார் (25) என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் பாலமேடு சென்று சரவணக்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 28 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.8 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் சரவணக்குமார் கடந்த சில மாதங்களாக கமுதி, அபிராமம், பார்த்திபனூர், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு கண்ணாடி சன்னல், கதவு செய்யும் தொழில் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி களில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் கேமராக்களை ஆய்வு செய்தும், வேறு காவல் நிலையங்களில் ஏதேனும் புகார் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story