காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 13 Feb 2022 8:26 PM IST (Updated: 13 Feb 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொடைக்கானல்:
உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர் தினத்தை கொண்டாட சர்வதேச சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காதல் ஜோடிகள் குவிந்தனர். இது தவிர நேற்றும், நேற்று முன்தினமும் வாரவிடுமுறை தினம் என்பதால் கொடைக்கானல் நகருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
இதனிடையே கொடைக்கானலுக்கு வருகைபுரிந்த காதலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அங்கு நிலவிய இதமான சீதோஷ்ணநிலை மாலையிட்டு வரவேற்பது போல் இருந்தது. மாலை நேரத்தில் மேக மூட்டங்கள் தரை இறங்கியதை அவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்து புகைப்படங்கள் எடுத்தனர். அத்துடன் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் பூத்துக்குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பூங்காக்களில் இளம்ஜோடிகளின் வருகை அதிகம் இருந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story