மதுவிற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 37 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 37 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 37 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்து 37 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 21 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 5 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 75 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், 131 மதுபாட்டில்கள், பணம் ரூ.36 ஆயிரத்து 500, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story