வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்


வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2022 9:03 PM IST (Updated: 13 Feb 2022 9:03 PM IST)
t-max-icont-min-icon

மாசிமக பெருவிழாவையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வேதாரண்யம்:
மாசிமக பெருவிழாவையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாசிமக பெருவிழா
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக  பெருவிழா  நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழா நாட்களில் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  இன்று காலை நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 
 இதில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., ஸ்தலத்தார்கள் கயிலமணி வேதரத்தினம், கேடிலியப்பன், உபயதாரர்கள், தொண்டு நிறுவனத்தினர், வர்த்தக சங்கத்தினர், நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மறைகாடார்... தியாகேசா... என பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
போலீஸ் பாதுகாப்பு
 தேருக்கு முன்னால் விநாயகர், சுப்பிரமணியர் பல்லக்கும், தேருக்கு பின்னால் அம்மன், சண்டிகேஸ்வரர்  பல்லக்கும் சென்றது. தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. 
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர், நீர்மோர், குளிர்பானம் ஆகியவற்றை பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டன. நகராட்சி சார்பில் சுகாதார பணி மற்றும் தூய்மை பணி செய்யப்பட்டு இருந்தது
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
---

Next Story