வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
தலைஞாயிறு, கீழ்வேளூர் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
வாய்மேடு:
தலைஞாயிறு, கீழ்வேளூர் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
தலைஞாயிறு
தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க., தி.மு.க., நாம்தமிழர் கட்சி , விடுதலைசிறுத்தைகள் கட்சி, பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 58 பேர் களத்தில் உள்ளனர். 15 வார்டுகளில் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
சின்னம் பொருத்தும் பணி
இதை தொடர்ந்து 15 வார்டுகளில் 15 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. .இந்த பணியினை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான குகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி தேர்தல் மண்டல அலுவலர் ராஜன், இளநிலை உதவியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. அ.தி.மு.க. காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க. அ.ம.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 49 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
போலீஸ் பாதுகாப்பு
பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனி அறையில் வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணன், மண்டல தேர்தல் அலுவலர் ஹரி கிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்குமரன், சந்திரகலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story