வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
நாகை நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளிப்பாளையம்:
நாகை நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தல்
நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு வாா்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 35 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இந்த 35 வார்டுகளில் போட்டியிட 170 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க நாகை நகராட்சியில் 92 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாகை நகராட்சியில் 87 ஆயிரத்து 975 வாக்காளர்கள் வாக்களிக்க உளள்னர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
கலெக்டர் ஆய்வு
வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் வைக்கப்பட்டு, வருகிற 22-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கலெக்டர் கூறினார்.
இதை தொடர்ந்து நாகை புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், மஞ்சக்கொல்லை, பொரவச்சேரி, சிக்கல் வடக்கு வீதி, சங்கமங்கலம், தேமங்கலம் ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணியையும் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
மேலும் வேளாங்கண்ணி ஆர்ச், தேமங்கலம் ஆராம்ப சுகாதார நிலையம், சிக்கல் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஒன்றிய பொறியாளார் ராஜாராமன், பணிமேற்பார்வையாளர்கள் அன்பழகன், மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
--
Related Tags :
Next Story