ஆபத்தான நிலையில் மின்கம்பம்
திருவாரூர் அருகே சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருவாரூர்:-
திருவாரூர் அருகே சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மின்கம்பம்
திருவாரூர் அருகே கள்ளிக்குடி பகுதியில் பிரதான சாலையை அதிக மின் அழுத்தம் கொண்ட மின் பாதை கடந்து செல்கிறது. இந்த இடத்தில் மின் கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பத்தின் சிமெண்டு கான்கிரீட்டுகள் சேதம் அடைந்து உள்ளது.
அதில் உள்ள கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால் இந்த மின் கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது. தற்போது கோடை காலத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின் கம்பம் சாயும் ஆபத்து உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் கோரிக்கை
இந்த மின் கம்பம் சாய்ந்து பிரதான சாலையில் விழும் போது அந்த வழியாக செல்பவர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சுழ்நிலை இருந்து வருகிறது.
எனவே எந்தவித அசம்பாத சம்பவங்கள் நடைபெறும் முன்பு இந்த மின் கம்பத்தை மின் வாரியத்துறை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story