உரிமம் பெற்ற தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்


உரிமம் பெற்ற தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2022 10:24 PM IST (Updated: 13 Feb 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

உரிமம் பெற்ற தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை விற்பனையாளர்களுக்கு நாகை, திருவாரூர் விதை ஆய்வு துணை இயக்குனர் தேவேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

மன்னார்குடி:-

உரிமம் பெற்ற தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை விற்பனையாளர்களுக்கு நாகை, திருவாரூர் விதை ஆய்வு துணை இயக்குனர் தேவேந்திரன் அறிவுறுத்து உள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

விதை விற்பனை 

திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தரமான நெல், உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, மற்றும் குறைந்த அளவில் காய்கறி விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதைவிற்பனை நிலையங்களில் விதைச்சட்டத்தின்படி விற்பனை உரிமம் பெற்ற பிறகே விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். 
விதைகள் கொள்முதல் செய்யும் போது விதை அளவிற்கான ரொக்க ரசீது, பதிவுச்சான்று மற்றும் முளைப்புத்திறன் அறிக்கை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். விதை விற்பனை நிலையங்களில் தினமும் விவசாயிகளுக்கு தெரியும்படி தகவல் பலகையில் பயிர் ரகம், இருப்பு, விற்பனை விலை ஆகிய விவரங்களை தெளிவாக எழுதி வைத்திருக்க வேண்டும். 

வலைதளத்தில் பதிவேற்றம்

விற்பனை ரசீதில் பயிர், ரகம், நிலை, தேதி, விவசாயி கையொப்பம் இருக்க வேண்டும். அனுமதிக்கப்படாத விவரங்கள் பதிவுச்சான்று முளைப்புத்திறன் அறிக்கை இல்லாத விதைகளை விற்பனை செய்யக்கூடாது. புதிதாக வரப்பெற்ற விதை குவியல்களின் விவரங்களை தங்கள் பகுதி விதை ஆய்வாளருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். விதைகள் விற்பனை அளவு, இருப்பு அளவு விவரத்தை தங்களுடைய விதை உரிம வலைதளத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
இதன்மூலம் விவசாயிகள் உழவன் செயலி மூலம் தங்கள் பகுதியின் விதை விற்பனையாளரிடம் உள்ள தங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளவும் மற்ற விவசாயிகளுக்கு தெரிவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். விற்பனை உரிமம் இல்லாமல் விதைகளை விற்பனை செய்யக்கூடாது. 

உரிமம்

விதை உரிமம் பெறாமல், உரிமம் புதுப்பிக்காமல் உள்ள விற்பனையாளர்கள் அந்த பகுதி விதை ஆய்வாளரை அணுகி இணையதளம் மூலம் முறையாக விண்ணப்பம் செய்து, பதிவு கட்டணம் செலுத்தி உரிமம் பெற்ற விதைகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story