கடலூரில் விபத்து: கார் மோதி மருந்து விற்பனை பிரதிநிதி பலி
கடலூரில் கார் மோதி மருந்து விற்பனை பிரதிநிதி பலியானாா்.
கடலூர்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆண்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ரஞ்சித்குமார் (வயது 21). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் தற்போது பாதிரிக்குப்பம் வேல்முருகன்நகரில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர் கடலூர் அண்ணா பாலம் வழியாக புதுநகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் பலத்த காயமடைந்தார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி அவரது தாய் கலா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story