தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
கொசுத்தொல்லை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆர்.வி. நகரில் உள்ள தெருக்களில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் வீடுகளில் உள்ள குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொசு தொல்லையால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொசு கடிப்பதினால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கார்த்திக் செல்வராஜ், ஒரத்தநாடு.
பஸ் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் அகரமாங்குடி பகுதிக்கு முறையான பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சித்தர்காடு, அகரமாங்குடி சிந்தாமணி தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக நீண்டதூரம் இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தினமும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் வசதி இல்லாததால் அகரமாங்குடி பகுதி மக்கள் கூட்ட நெரிசலுடன் வரும் பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களின் நலன் கருதி அகரமாங்குடி பகுதிக்கு முறையான பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், அகரமாங்குடி, தஞ்சை.
Related Tags :
Next Story