முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விவாதம் நடத்த தகுதி இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பதில்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விவாதம் நடத்த  தகுதி இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பதில்
x
தினத்தந்தி 13 Feb 2022 11:58 PM IST (Updated: 13 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

பாம்புபோல் ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக விவாதம் செய்வதற்கு தகுதி இல்லை என திருப்பத்தூரில் திண்டுக்கல் ஐ.லியோனி பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.

திருப்பத்தூர்

பாம்புபோல் ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக விவாதம் செய்வதற்கு தகுதி இல்லை என திருப்பத்தூரில் திண்டுக்கல் ஐ.லியோனி பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.
திண்டுக்கல் ஐ.லியோனி   பிரசாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பாட்டுப்பாடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடுவீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது;-

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் வாக்கு சேகரிக்க மேடைக்கு வந்தனர். அப்போது அவர்கள் வருவதற்கு முன் எம்.ஜி.ஆர். படத்தில் வந்த சினிமா பாடல்களை போட்டார்கள்.
‘‘சிலர் ஆசைக்கும் பேருக்கும் பதவிக்கும் ஊரார் கால் பிடிப்பார்’’ என்ற அந்த பாடல் தனக்காக போடப்பட்ட பாடல் என்று கூட தெரியாமல் ரசித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.

தகுதி இல்லை

‘நீட்’ தேர்வு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து விவாதம் செய்யத் தயாரா? என எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். நான் கேட்கிறேன், ‘நீட்’ குறித்து முதலில் நீங்கள் என்னுடன் விவாதம் செய்வதற்கு தயாரா?
எம்.எல்.ஏ.வாக, மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக இருந்து முதல்-அமைச்சராக உயர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஆனால் நீங்கள் டேபிளுக்கு அடியில் மலைப்பாம்பை போல் ஊர்ந்து சசிகலாவின் காலில் விழுந்து முதல்-அமைச்சரானது எல்லாருக்கும் தெரியும்.
ஆகையால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதம் செய்வதற்கு உங்களுக்கு தகுதி இல்லை.

சாதனைகள்

கடந்த எட்டு மாதத்தில் பல்வேறு சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது. எனவே அவற்றை எண்ணிப்பார்த்து தி.மு.க.வுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் க.தேவராஜ் எம்.எல்.ஏ., திருப்பத்தூர் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., நகர தி.மு.க.செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.
இதேபோன்று ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் 18 தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

Next Story