ராணிப்பேட்டையில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
ராணிப்பேட்டையில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அருகிலுள்ள இளவரசன்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஞானசிகாமணி (வயது 31). இவர் ராணிப்பேட்டையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ளவரான இவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டையில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story