விஷம் குடித்து தொழிலாளி சாவு


விஷம் குடித்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 14 Feb 2022 12:51 AM IST (Updated: 14 Feb 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள கண்டிகைபேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55) தொழிலாளி. இவரது மனைவி ஹெலன் அமிர்தகனி. செல்லத்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தியவாறு இருந்து வந்தார். இதனை அவரது மனைவி ஹெலன் அமிர்தகனி கண்டித்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்லத்துரை விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story