போலி வாக்குறுதிகள் அளித்த தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும்-எச்.ராஜா பேச்சு
போலி வாக்குறுதிகள் அளித்த தி.மு.க.வை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என மதுரையில் எச்.ராஜா பிரசாரம் செய்தார்.
மதுரை,
போலி வாக்குறுதிகள் அளித்த தி.மு.க.வை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என மதுரையில் எச்.ராஜா பிரசாரம் செய்தார்.
தேர்தல் பிரசாரம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க.வினர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.1000 கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அதன்படி கொடுக்கவில்லை. மேலும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார், உதயநிதி ஸ்டாலின். தற்போது வரை தள்ளுபடி செய்யவில்லை. எனவே பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிய உதயநிதியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். போலி வாக்குறுதிகள் அளித்த தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும்.
தனித்து போட்டி
உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப்போட்டியிடவில்லை. மக்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசுடன் மோதும் போக்கைத் தவிர ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story