திருவெண்காடர் கோவிலில் மாசி மக திருவிழா


திருவெண்காடர் கோவிலில் மாசி மக திருவிழா
x
தினத்தந்தி 14 Feb 2022 1:38 AM IST (Updated: 14 Feb 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே வடக்கு பாப்பான்குளம் திருவெண்காடர் கோவிலில் மாசி மக திருவிழா நடந்து வருகிறது.

கடையம்:
கடையம் அருகே வடக்கு பாப்பான்குளத்தில் உள்ள திருவெண்காடர் கோவிலில் மாசிமகப்பெருந்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் சுவாமி- அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து வீதி உலாவும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலையில் சுவாமி- அம்பாள் வீதிஉலா முடிந்து மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வடக்கு பாப்பான்குளம் ஊர் பொதுமக்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

Next Story