தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 Feb 2022 1:48 AM IST (Updated: 14 Feb 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சாலையின் ஓரத்தில் பள்ளம்
குளச்சல் அண்ணாசிலை ஜங்சனில் சாலையின் ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தின் அருகில் போக்குவரத்து சிக்னல் கம்பம் உள்ளது. பள்ளத்தால் சிக்னல் கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாகும். எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                       -அக்மல், குளச்சல்.
சேதமடைந்த மின்கம்பிகள்
குளச்சல் ஆசாத் நகர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பிகள் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழுந்து உயிர்ேசதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பிகளை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                  -முகமது சபீர், குளச்சல்.
கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்
நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி நான்குமுனை சந்திப்பில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடை மிகவும் சேதமடைந்து சாக்கடை நீர் சாலையில் பாயும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சேதமடைந்த கழிவுநீர் ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                         -செல்வகுமரன், மீனாட்சிபுரம்.
தெருவிளக்குகள் எரியவில்லை
வடக்கு சூரங்குடி பகுதியில் விவேகானந்தர் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றி புதிய விளக்குகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                               -அருண், வடக்கு சூரங்குடி.
வேகத்தடை அவசியம்
நாகர்கோவில் கணேசபுரம் ரோட்டில் மீன், காய்கறி மார்க்கெட், மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி ஆகும். ஆனால் இந்த பகுதியில் வாகனங்கள் அதிக வேகத்துடன் வருவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                   -எஸ்.குமார், கணேசபுரம், நாகர்கோவில்.
சாலையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் ஆசாரிமார் தெற்கு தெருவில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                      -ராமநாதன், நாகர்கோவில்.

Next Story