கார் மோதி முதியவர் பலி


கார் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 14 Feb 2022 1:56 AM IST (Updated: 14 Feb 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் பலியானார்.

சமயபுரம்
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெய்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). இவர் நேற்று மதியம் சைக்கிளில் பாடாலூருக்கு சென்று விட்டு அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று ராமசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் காயமடைந்தனர்.
 இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும், காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story