தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 14 Feb 2022 1:57 AM IST (Updated: 14 Feb 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த சாலை 
விருதுநகர் மாலைப்பேட்டை தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரும் இ்ன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், விருதுநகர். 
தேங்கிய மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டம் காட்டுப்பள்ளி அமீர் அப்பாஸ் மந்திரி வளாகத்தின் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தேங்கிய மழைநீரால்  கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுேநாய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனிக்க வேண்டும். 
பொதுமக்கள், காட்டுப்பள்ளி.
போக்குவரத்து நெரிசல் 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லல் அருகே நடராசபுரம் ஊராட்சி பிலாமிச்சம்பட்டியில் சாலைகள் குறுகியதாக உள்ளது. பள்ளி செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை உள்ளே வர முடியாத நிலை நிலவுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையின் பாதையை அகலப்படுத்த வேண்டும்.
ரவீந்திரன், பனங்குடி.
நாய்கள்  தொல்லை
மதுரை வில்லாபுரம், அண்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றது. பகலில் கூட்டமாக தெருவில் சுற்றிதிரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இரவில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த ேவண்டும்.
சிவா, மதுரை.
பஸ் வசதி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து பெரியார் நிலையத்திற்கு ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் பயணிக்கின்றனர். இந்நிலையில் இந்த வழித்தடத்தில் போதுமான பஸ் வசதியின்றி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.  எனவே மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
லியோ, திருமங்கலம்.
சாலை அமைக்கப்படுமா? 
மதுரை 48-வது வார்டு கே.வி.ஆர்.நகர் 1, 2 மற்றும் 3-வது தெருவில் மழைநீர் செல்ல ஏதுவாக பேவர்பிளாக் சாலை வசதி இல்லாததால் தேவையின்றி கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைத்து கால்வாயில் மழைநீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கனகராஜ், கே.வி.ஆர்.நகர்.

Next Story