செண்பகராமன்புதூரில் குடிசை வீட்டுக்கு தீ வைப்பு
செண்பகராமன்புதூரில் குடிசை வீட்டுக்கு தீ வைத்த நபரை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி,
செண்பகராமன்புதூர் சிதம்பரபுரம் பகுதியில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு உள்ளது. இவர் அப்பகுதியில் உள்ளவர்களின் மாடுகளை மேய்த்து வருகிறார். காலையில் சென்றால் மாலையில் தான் சாமுவேல் வருவது வழக்கம்.
அதே போல் சம்பவத்தன்று மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு வந்த போது, அவரது குடிசை வீடு எரிந்து சாம்பலாகி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாமுவேல் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, குடிசை வீட்டுக்கு ஒருவர் வந்து சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அந்த நபரை தேடி வருகிறார்கள்.
கடந்த ஆண்டும் இதே போல் குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story