சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு
வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர் மன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவாங்கர் கலை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எந்திரங்களில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
இந்த பணியினை தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மேகநாதரெட்டி ஆய்வு செய்தார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான பாஸ்கரன், தேர்தல் பொறுப்பாளரும் ஆ.டி.ஓ.வுமான கல்யாண்குமார், தாசில்தார் அறிவழகன் மற்றும் வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story