2 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
2 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடத்தூர்
2 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொடிவேரி அணை
கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்போது கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள்.
ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் தங்கள் குழந்தைகளுடன் வருவார்கள். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும்.
திறக்கப்பட்டது
கொடிவேரி அணை பூங்காவில் தாங்கள் கொண்டு வரும் உணவுப் பதார்த்தங்களையும், அங்கு விற்கப்படும் சூடான மீன் வறுவல்களையும் வாங்கி ருசிப்பார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொடிவேரி அணை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து கொடிவேரி அணை நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டனர். எனினும் குறைவானவர்களே வந்து அணையில் குளித்துவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story