மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டது


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 14 Feb 2022 2:42 AM IST (Updated: 14 Feb 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடந்தது.

வேப்பந்தட்டை:

வாக்குச்சீட்டு பொருத்தும் பணி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது. இதில் அரும்பாவூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 15 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 11 ஆயிரத்து 25 வாக்காளர்கள் இங்கு வாக்களிக்க உள்ளனர்.
இதேபோல் பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிகளில் 2 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 13 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 8 ஆயிரத்து 924 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
இந்நிலையில் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அலுவலர்களிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியின்போதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்று அறிவுறுத்தினார்.
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களில், பொறியாளர்கள் கண்காணிப்பில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்படும். வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு அறையில் வாக்குப் பெட்டிகள் வைக்கும் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்பு நடைபெறுகிறது. இத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வருகை தந்து அவசியம் வாக்களிக்க வேண்டும், என்று கூறினார்.
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்) மோகன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ரவி, அருள்வாசகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story