சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு முன்னேற்பாடு பணிகள்-ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு


சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு முன்னேற்பாடு பணிகள்-ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 14 Feb 2022 2:54 AM IST (Updated: 14 Feb 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

சேலம்:
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தேர்தல் பணிகள்
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. சேலம் மாநகரில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் பணிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முழு வீச்சில் நடக்கிறது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 
அப்போது தபால் வாக்கு செலுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள பெட்டியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் தபால் வாக்குகள் செலுத்துவதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில், வார்டு எண், தொடர் எண், பாகம் எண் போன்ற அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்தார்.
தபால் வாக்குகள்
தொடர்ந்து தபால் வாக்குகள் கோரி விண்ணப்பித்த பணியாளர்களுக்கு வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதே போன்று வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.
அப்போது வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட தேதியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அலுவலர்களிடம் கூறினார். 
இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் மருதபாபு, உதவி வருவாய் அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story