சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்
சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்
மடத்துக்குளம் அருகே வேடபட்டி ரோட்டின் ஓரம் பல்வேறு கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற் படுகிறது.
கழிவுகள்
மடத்துக்குளம் தாலுகா கழுகரை பஸ் நிறுத்ததில் இருந்து வேடபட்டி வழியாக துங்காவி செல்லும் ரோடு உள்ளது. உடுமலை - தாராபுரம் ரோட்டையும், பொள்ளாச்சி பழனி தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வழித்தடமாக இந்த ரோடு அமைந்துள்ளது. தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இதன் இருபுறமும்உள்ள விளை நிலங்களுக்கு இடுபொருள்கள் எடுத்துச் செல்லவும், விளைந்த தானியங்களை எடுத்து வரவும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் மற்றும் இதர காரணங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்போது இந்த ரோடு மாற்றுபாதையாக உள்ளது.
இவ்வளவு பயன்பாடுள்ள முக்கிய ரோட்டில் வேடபட்டி, கழுகரை பகுதியின் ரோடு ஓரத்தின் பல இடத்தில் இறைச்சி கழிவுகள், கட்டிட கழிவுகள் மற்றும் பல வகை கழிவுகள் கொட்டியுள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மடத்துக்குளம் உள்ளிட்ட பல பகுதி ிலிருந்து இரவு நேரம் வாகனங்களில் கழிவுகளை எடுத்து வருகின்றனர். மூட்டை மூட்டையாக கொண்டு வந்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ரோட்டின்ஓரம் வீசிச்செ ல்கின்றனர். சில நேரம் தீ வைத்தும் சென்றுவிடுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இறைச்சிக்காக வரும் நாய்களால் விபத்து நடக்கிறது. தீ வைப்பதால் புகை சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இதுபோல் கழிவுகள் கொட்டாமல் தடுக்க.
வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story